இது ஜனநாயக உரிமை.. திமுகவின் போக்கு மோசமான முன்னுதாரணம் - அண்ணாமலை தாக்கு!

Tamil nadu BJP K. Annamalai
By Swetha Dec 05, 2024 08:30 AM GMT
Report

திமுக அரசின் எதேச்சதிகார போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேச நாட்டில், ஹிந்து மத மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வங்கதேச அரசைக் கண்டித்து,

இது ஜனநாயக உரிமை.. திமுகவின் போக்கு மோசமான முன்னுதாரணம் - அண்ணாமலை தாக்கு! | Annamalai Slams Dmk Tamil Nadu Government

தமிழக பாஜக சார்பாகத் தமிழகம் முழுவதும் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அமைதியான முறையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு, அனைத்து மாநில அரசுகளும் அனுமதி வழங்கியுள்ள நிலையில்,

தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?

தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?

ஜனநாயக உரிமை.. 

திமுக அரசு மட்டும் அனுமதி வழங்க மறுத்ததோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் பொதுமக்களையும், தமிழக மூத்த தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்திருக்கிறது. வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஹிந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பது,

இது ஜனநாயக உரிமை.. திமுகவின் போக்கு மோசமான முன்னுதாரணம் - அண்ணாமலை தாக்கு! | Annamalai Slams Dmk Tamil Nadu Government

ஜனநாயக உரிமை. இதனை முடக்க நினைக்கும் திமுகவின் போக்கு, மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.