இதை செஞ்சிட்டேன்'னு மட்டும் திமுக காட்டட்டும் - நானே பரிசளிக்கிறேன்!! அண்ணாமலை அதிரடி

M K Stalin Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Feb 09, 2024 04:41 AM GMT
Report

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

என் மண் என் மக்கள்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றார்.

annamalai-slams-dmk-in-thiruvallur-speech

91-வது நாளாக தொடரும் இந்த பாதயாத்திரையில் அவர் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி வந்தடைந்தார். அங்கே மக்களிடம் உரையாற்றிய அவர் திருவள்ளுர் எம்.பி காங்கிரஸ் கட்சியின் ஜெயக்குமாரின் அண்மை பேட்டியை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்.

20-ஐ காட்டு

4 வருடம் 10 மாதங்கள் அவர் தூங்கிவிட்டு தற்போது தேர்தல் நேரத்தில் தொகுதி பக்கம் வந்து பேசுகிறார் என்று விமர்சித்த அண்ணாமலை, 2 வயது குழந்தைக்கு இருக்கும் அரசியல் தெளிவு கூட அவருக்கு இல்லை என சாடினார்.

நான் சொன்னதே வேற.. வேலையில்லாத வெட்டி அமைச்சர் பி.டி.ஆர் - அண்ணாமலை பதிலடி!

நான் சொன்னதே வேற.. வேலையில்லாத வெட்டி அமைச்சர் பி.டி.ஆர் - அண்ணாமலை பதிலடி!

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கடந்த 2019-ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்தேர்தலின் போது பாஜக சார்பில் அளிக்கப்பட்ட 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்து இது தான் மோடி கிராண்ட்டி என பெருமிதத்துடன் கூறினார்.

annamalai-slams-dmk-in-thiruvallur-speech

அதே போல, மாநிலத்தில் ஆளும் திமுக அரசு முடிந்தால் இதனை வருட ஆட்சி காலத்தில் தாங்கள் நிறைவேற்றிய 20 வாக்குறுதிகளை கொடுத்தால், தானே அவர்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்த அண்ணாமலை, ஆனால் 20-ஐ கூட நிறைவேற்ற முடியாமல் திமுக தத்தளித்து கொண்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.