நான் சொன்னதே வேற.. வேலையில்லாத வெட்டி அமைச்சர் பி.டி.ஆர் - அண்ணாமலை பதிலடி!

Tamil nadu K. Annamalai Palanivel Thiagarajan
By Jiyath Feb 06, 2024 01:21 PM GMT
Report

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

அமைச்சர் கேள்வி 

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தால், இதுவரை யார் குடும்பத்திற்கு அரசு வேலை கிடைக்கவில்லையோ அவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

நான் சொன்னதே வேற.. வேலையில்லாத வெட்டி அமைச்சர் பி.டி.ஆர் - அண்ணாமலை பதிலடி! | Annamalais Reply To Ptr Palanivel Thiagarajan

அவரின் இந்த அறிவிப்பு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "ஒரு ஒப்பீட்டுக்கு-- தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம். பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று.. அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகக் குடும்பங்களில் இதுவரை அரசு வேலை கிடைக்காத குடும்பங்களில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று நான் கூறியதை திமுகவின் குடும்பத் தொலைக்காட்சி திரித்துச் சொல்லியிருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள் தொலைக்காட்சி நடத்துவதே மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்கத்தான்.

கல்லை நட்டு சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு மூடநம்பிக்கை நிலவுகிறது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை!

கல்லை நட்டு சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு மூடநம்பிக்கை நிலவுகிறது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை!

அண்ணாமலை பதிலடி 

ஆனால், ஒரு மாநிலத்தின் அமைச்சர், வேலையில்லாமல் எவ்வளவு தூரம் வெட்டியாக இருக்கிறார் என்பது, திமுகவின் குடும்பத் தொலைக்காட்சியில் வந்த பொய்யான செய்திக்கும் கருத்து சொல்லிக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது.

நான் சொன்னதே வேற.. வேலையில்லாத வெட்டி அமைச்சர் பி.டி.ஆர் - அண்ணாமலை பதிலடி! | Annamalais Reply To Ptr Palanivel Thiagarajan

அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுத ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது லட்சம்தான் என்பது மனிதவளத் துறையின் அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே. 30 லட்ச விண்ணப்பதாரர்களில், அரசுப் பணி பெறாத குடும்பத்தாரை கண்டறிந்து, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது சுமையாக நீங்கள் கருதலாம், ஆனால் அதுதான் உண்மையான சமூகநீதி. இதை பாஜக செய்யும். திமுகவை போல் 3.5 லட்ச காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்து அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றமாட்டோம்.

முதலில், அரசுப் பணிக்கான தேர்வுகள் எழுதி, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, தேர்வு முடிவுகளோ, நேர்முகத் தேர்வுக்கான அழைப்போ, பணி நியமனமோ, செய்யாமல் இருக்கும் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையத்தின் தூக்கத்தைத் தட்டி எழுப்பும் பணியை திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் செய்யட்டும். அதற்கு முன்பாக, இரண்டு ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருக்கும் தேர்வாணையத் தலைவர் பொறுப்புக்கும் உறுப்பினர் பொறுப்புக்கும் தகுதியானவர்களை நியமிக்கட்டும். திமுகவின் போலிச் செய்திகளுக்கும், பொய் புனைதலுக்கும் கருத்து பிறகு சொல்லிக் கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.