உருவாக்கப்பட்ட போலி பிம்பம்...நீட்டிற்கு பிறகே அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்தார்கள் - அண்ணாமலை

Tamil nadu BJP K. Annamalai NEET
By Karthick Jul 03, 2024 06:23 AM GMT
Report

இந்திய அரசியல் நீட் தேர்வு விலக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூகவலைத்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை பதிவு

அதில்,

நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு AK ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, @BJP4TamilNadu பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.  

NEET Exam

நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழக அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அண்ணாமலை - அதிரும் பாஜக?

தமிழக அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அண்ணாமலை - அதிரும் பாஜக?

போலி பிம்பம் 

ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?'

Annamalai slams dmk in NEET exam

நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?