திமுகவினரின் அதிகார மமதை..பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் - அண்ணாமலை!

Tamil nadu DMK K. Annamalai
By Swetha Aug 14, 2024 01:30 PM GMT
Report

மாணவனை திமுக பிரமுகர் தாக்கிய சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, காவல் நிலையம் அருகிலேயே, 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவரை, திமுகவைச் சேர்ந்த நபரும் அவரது நண்பர்களும், கத்தியால் குத்தியும்,

திமுகவினரின் அதிகார மமதை..பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் - அண்ணாமலை! | Annamalai Slams Dmk For Attacking School Student

கடுமையாகத் தாக்கியும் கொலை முயற்சி செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு உள்ளான பள்ளி மாணவர், விரைவாக நலம்பெற வேண்டிக் கொள்கிறேன்.திமுக அரசின் ஊழல் நிர்வாகம் காரணமாக,

வெறும் ஒரே ஒரு ஓட்டு பெற்ற அண்ணாமலை - பாஜகவினரை அதிரவைத்த கோவை!!

வெறும் ஒரே ஒரு ஓட்டு பெற்ற அண்ணாமலை - பாஜகவினரை அதிரவைத்த கோவை!!

அதிகார மமதை..

பழுதடைந்த சாலையில் சென்ற போது வாகனத்திலிருந்து தவறி விழுந்த மாணவர், திமுகவை விமர்சித்ததால், திமுகவினர் அவரைக் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை விமர்சித்தால்,

திமுகவினரின் அதிகார மமதை..பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் - அண்ணாமலை! | Annamalai Slams Dmk For Attacking School Student

பள்ளி மாணவரைக் கூட கொலை செய்வோம் எனும் அளவுக்கு, திமுகவினர் அதிகார மமதையில் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக தொண்டர் என்ற பெயரில் இது போன்ற சமூக விரோதிகளை வளர்த்து விடுவது, சமூகத்துக்குப் பேராபத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறாரா?

உடனடியாக, பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள், சமூகத்துக்கு என்றுமே அச்சுறுத்தலானவர்கள் என்பதை முதலமைச்சர் உணர்ந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.