பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா? அண்ணாமலை சரமாரி விமர்சனம்

M K Stalin Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Mar 20, 2024 09:49 AM GMT
Report

இன்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து கட்சியின் தேர்தல் அறிக்கையையும் திமுக வெளியிட்டது.

அண்ணாமலை விமர்சனம்

இந்நிலையில், இதனை கடுமையாக விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

annamalai-slams-dmk-election-manifesto

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை,

பெட்ரோல் விலை ரூ.75...சிலிண்டர் விலை 500 குறைப்பு - திமுக தேர்தல் அறிக்கை

பெட்ரோல் விலை ரூ.75...சிலிண்டர் விலை 500 குறைப்பு - திமுக தேர்தல் அறிக்கை

அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.

பொய் வாக்குறுதி

திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?

annamalai-slams-dmk-election-manifesto

இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை