பெட்ரோல் விலை ரூ.75...சிலிண்டர் விலை 500 குறைப்பு - திமுக தேர்தல் அறிக்கை

M K Stalin DMK Election
By Karthick Mar 20, 2024 06:52 AM GMT
Report

 வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளது திமுக தலைமை கழகம்.

மக்களவை தேர்தல்

வரும் மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணியில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் - அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் - அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கை இன்று கட்சி சார்பில் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கை

முக்கிய அம்சங்கள் அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் சிலவற்றை தற்போது காணலாம்.

  1. உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
  2.  புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
  3. இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  4. ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
  5. மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்
  6. ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்
  7. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
  8. மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்
  9. இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்
  10. காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்
  11. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்
  12. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
  13. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்
  14. மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கடன் 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்
  15. 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்
  16. தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்
  17. பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்
  18. நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்.