அவுங்களெல்லாம் தமிழகத்திற்கு பிடித்த பீடை...ஒவ்வொருவரா வரேன்!! யாரை சொல்கிறார் அண்ணாமலை??
கூட்டணி உடைந்ததில் இருந்து தொடர்ந்து சரமாரி வார்த்தை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள் அதிமுக - பாஜகவினர்.
குறிப்பாக அதிமுக தலைவர்கள் பலரை கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை.
அவர் அதிமுகவினரை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு அதிமுகவினர் தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.ஜெயக்குமார் - ஆர்.பி.உதயகுமார் - எடப்பாடி பழனிசாமி போன்றோர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அண்மையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார் அண்ணாமலை. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்களை பிடித்திருந்த வேதாளம் விட்டுருச்சு என அண்ணாமலையை சாடி பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை பேசும் போது, தமிழ்நாட்டில் பல பேய்கள் உள்ளது. இந்த வேதாளம் வந்திருப்பது பல பேய்களை ஓட்ட தான்.
ஒரு ஒரு பேயாக ஓட்டிட்டு இருக்கேன். இந்த பேய்களெல்லாம் தமிழக மக்களை பிடித்த பீடைகளை போல. ஒரு ஒரு பேயாக தொத்திட்டு வரேன் என கூறியுள்ளார்.