எங்கும் ஊழல்.. எதிலும் ஊழல்.. மக்கள் விரோத அரசு - விளாசிய அண்ணாமலை!

Tamil nadu DMK K. Annamalai
By Swetha Dec 05, 2024 12:30 PM GMT
Report

விரோத அரசால் தினம் உயிரிழப்பு அரங்கேறுகிறது' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலக்கப்பட்டுள்ளது. அதை அறியாமல் அந்த தண்ணீரை குடித்து வந்த பொதுமக்களுக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கும் ஊழல்.. எதிலும் ஊழல்.. மக்கள் விரோத அரசு - விளாசிய அண்ணாமலை! | Annamalai Slam Dmk Over Pallavaram Contamination

அதில் மூவர் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன்.இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை தான் - தேஜஸ்வி சூர்யா திட்டவட்டம்

தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை தான் - தேஜஸ்வி சூர்யா திட்டவட்டம்

விரோத அரசு

எனவே மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?

எங்கும் ஊழல்.. எதிலும் ஊழல்.. மக்கள் விரோத அரசு - விளாசிய அண்ணாமலை! | Annamalai Slam Dmk Over Pallavaram Contamination

அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 - 13 தான் என்கிறார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன்.

ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால்,

அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது. என்று தெரிவித்துள்ளார்.