திமுக அமைச்சர்களை அடக்க எங்களுக்கு தெரியும் - அண்ணாமலை பதிலடி
அமைதியான முறையில் வரும் முருக பக்தர்கள் மீது ஏன் கை வைக்கிறீர்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் நேற்று(04.02.2025) இந்து மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே என போராட்டம் நடத்தின.
இந்த போரட்டம் குறித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, "திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தியது இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். முழுக்க முழுக்க பாஜக கட்சியினர் என குற்றஞ்சாட்டுகிறேன்.
அண்ணாமலை
சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வரும் இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைய முயற்சிக்கிறது. வட மாநிலங்களைப் போல இங்கும் கலவரத்தை ஏற்படுத்த நினைத்தால், இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தயாராக உள்ளார் முதல்வர் ஸ்டாலின். என பேசினார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, " அமைச்சர் சேகர்பாபு முதலில் 1931ல் பிரிவியூ கவுன்சில் வழங்கிய தீர்ப்பை படிக்க வேண்டும். தற்போது புதிதாக இன்னொரு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்சனையை ஆரம்பிக்கின்றனர்.
ஆடு எடுத்து சென்று சாப்பிடுகின்றனர். ஒரு எம்.பி மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை. சேகர்பாபு வீர வசனம் பேசுகிறார். ஒரு எம்பி மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை. சேகர் பாபு வீர வசனம் பேசுகிறார். இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகிறார்.
முதல்வருக்கு நன்றி
பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் தவறு செய்பவர்களை தான் தமிழக காவல்துறை பிடிக்க வேண்டும். ஆனால் நள்ளிரவு 2 மணிக்கு 350 க்கு மேற்பட்ட பாஜகவை சேர்ந்தவர்களின் வீடுகளில் கைது செய்து வைத்து உள்ளனர். பாஜக தலைவர்களை கைது செய்து அதன் மூலம் அவர்களை வளர்த்து வருவதற்கு தமிழக காவல்துறைக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில் மக்கள் தன்னெழுச்சியாக வந்துள்ளனர் எழுச்சி வந்து உள்ளனர். சேகர்பாபு சரிந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் எங்கள் சகோதரகள் தான். ஆனால் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்த பிரச்சனையை ஏற்படுத்தியது யார்?
இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என சீன் போட்டு சுற்றினால் உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அமைச்சர் ரகுபதி வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். எத்தனை நாளைக்கு அமைச்சர்களாக இருப்பீர்கள். கோர்ட்டு அனுமதி தந்த பின் அவர்களை எப்படி இரும்பு கரம் கொண்டு அடக்குவீர்கள்? அவர்கள் என்ன தப்பு செய்தவர்களா?
பிரச்சனையை உருவாக்குவது திமுக
இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு வீர வசனம் பேசுகின்றனர். முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்களை எப்படி அடக்க வேண்டும் என்று எங்களுக்கும் தெரியும். பொறுத்துக்கொண்டு உள்ளோம்.
இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என மிரட்ட பார்த்தீர்கள் என்றால் ரகுபதி இருக்கும் இடம் அவருக்கே தெரியாது. மிரட்ட உருட்டல்களை எல்லாம் திமுக கரை வேட்டிகளிடம் வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு பேர் கூடினார்களே பஸ்சை உடைத்தார்களா? பொது சொத்துக்கு சேதம் விளைவித்தார்களா? அமைதியான முறையில் பேசி விட்டு சென்றார்கள். பிரச்சனையை உருவாக்குவது திமுகதான்.
இந்துகளை அவமானப்படுத்தலாம்
நவாஸ் கனி அங்கு செல்ல என்ன உரிமை இருக்கிறது? அங்கு மாமிசம் சாப்பிட என்ன உரிமை இருக்கிறது? அவரை கைது செய்தீர்களா? காரணம் திமுகவிற்கு மைனாரிட்டி ஓட்டு வேண்டும். அமைதியான முறையில் வரும் முருக பக்தர்கள் மீது ஏன் கை வைக்கிறீகள்.
சென்னையின் மையப்பகுதியில் ஆட்டோவில் பெண்ணை கடத்தி செல்வதை பார்த்த ஒரு நபர் காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் சொல்லி மீட்க வேண்டிய நிலை உள்ளது. சென்னையில் இவ்வளவு போலீஸ் இருந்து சாதாரண நபர் தகவல் அளித்து பிடிக்க வேண்டியுள்ளது. இதை பார்த்து அமைச்சர்கள் ரகுபதி, சேகர் பாபு வெட்கப்பட வேண்டும்.
முருக பக்தர்களை பார்த்து இரும்பு கரம் கொண்டு அடக்கும் முன் இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியதானே. இந்துகள் மீது தான் இரும்பு கரம் மற்றவர்கள் மீது அல்ல. மற்றவர்கள் ஓட்டு அப்படி போட மாட்டார்கள். இந்துகள் பிரித்து போடுவார்கள் என்பதால் அவமானப்படுத்தலாம்." என பேசினார்.