ஸ்ட்ராங்கா இருங்கண்ணா.. விட்றாதீங்க - சீமானுக்கு கைகொடுத்த அண்ணாமலை
சீமானுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைகொடுத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
திருமண நிகழ்ச்சி
நடிகை கொடுத்த பாலியல் புகார், கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் பாஜக நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்றிருந்தார்.
சீமான்-அண்ணாமலை
அப்போது அங்கு வந்த சீமானை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், சீமானுக்கு கைகொடுத்த அண்ணாமலை, எப்படிண்ணா இருக்கீங்க? என்று கேட்டார்.
அதற்கு சீமான் நலமாக இருக்கிறேன் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பைட் பண்ணிட்டே இருங்கண்ணா... ஸ்ட்ராங்கா இருங்கண்ணா... விட்றாதீங்கண்ணா என்று அண்ணாமலை கூறிவிட்டு சென்றார்.
இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.