உனக்கு மட்டும் என்ன கொம்பா? செய்தியாளரை தோளில் தட்டி மிரட்டிய அண்ணாமலை!
செய்தியாளரிடம், அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை
பாஜக சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் இணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் மைக்கைப் பிடித்தபடி அவரை நோக்கி நீட்டினார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை,
"நான் எப்போது பேச வேண்டுமோ, அப்போது மட்டுமே பேசுவேன்" என்று கூறிவிட்டு கூட்ட அரங்குக்குள் சென்றார். பின்னர், அந்தச் செய்தியாளரை மீண்டும் அழைத்த அண்ணாமலை, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பரபரப்பு சம்பவம்
"உங்களுக்கு மட்டும் கொம்பு முளைச்சிருக்கா? நான் என்ன உங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறேனா? எனக்கு ஊதியம் கொடுக்கிறீர்களா? மற்ற மீடியாவைவிட பெரிய ஆள் என்று சீன் போட வேண்டுமா? அங்கு நிற்பவர்கள் எல்லாம் பாவமா?

மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்கள். நீ என்ன இலவசமாகப் பணி செய்கிறாயா? உனக்கு மாதச் சம்பளம் கொடுக்கிறார்கள். அதற்காக இந்த மிரட்டும் வேலையெல்லாம் வைத்துக்கொள்ளாதே" என்று கூறி
செய்தியாளரின் தோளில் பலமாகத் தட்டி மிரட்டும் தொனியிலும் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.