தோல்வியடைந்த நடிகர் துணை முதல்வர் ஆகியுள்ளார் - அண்ணாமலை
மதுரையில் டங்ஸ்டன் எடுத்தால் நல்லதும் உள்ளது என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் சென்றிருந்தார்.
3 மாதங்கள் படிப்பு முடிந்து இன்று(01.12.2024) தமிழ்நாடு திரும்பிய அவர்,கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மோடி
அதில் பேசிய அவர், "ஜனநாயகத்தில் மோடி போன்று இத்தனை வெற்றி பெற்ற ஒரு தலைவரை நாம் பார்த்தது கிடையாது. ஹரியானாவிலும், மஹாராஷ்டிராவிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். வேலை செய்கிறார் தொடர்ந்து வெற்றி பெறுகிறார். ஜனநாயகத்தில் செயல்திறனுக்கான அரசியலில் வெற்றி பெறக்கூடிய ஒரே தலைவர் மோடி.
மறுபக்கம் சமரச அரசியலில் ஈடுபடும் கட்சி, குடும்ப அரசியல் வைத்துக் கொண்டு ஒரு கட்சி, வேலையே செய்யாமல் தேர்தலின் போது பணம் கொடுத்து வெற்றி பெறும் இயக்கம். இந்த நான்கும் நம் முன் உள்ளே அரசியல்.
திமுக கொடுப்பதற்கு முன்பே, 2020 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் பாஜக அரசு அசாமில் பெண்களுக்கு மாதம் 830 ரூபாய் வழங்கி வருகிறது. மேலும் பாஜக ஆளும் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் பெண்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
தோல்வியடைந்த நடிகர்
நான் 3 மாத காலம் வெளியே படிக்க சென்ற போது, வெற்றிகரமான நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார். தோல்வியடைந்த நடிகர் துணை முதல்வர் ஆகிவிட்டார். உதயநிதி பதவியேற்றதை விமர்சிக்கவில்லை. அவரது கட்சி யாரை கொண்டு வருவதற்கும் உரிமை உண்டு.
பத்திரிகையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி சினிமாவை சுற்றி உள்ளது. இதனால், சாமானிய மக்களுக்கு எந்த பிரயோஜனம் கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், காப்பரை ஏற்றுமதி செய்த இந்தியா, மேலை நாட்டில் இருந்து காப்பர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
டங்ஸ்டன் மதுரையில் எடுத்தால் கண்டிப்பாக 10 பிரச்னைகள் உள்ளது. இல்லை என சொல்லவில்லை. மக்கள் வெளியே போக வேண்டும். அந்த 20 சதுர கி.மீ, இடத்தில் டங்ஸ்டன் எடுக்கவேண்டும். அந்த முக்கியமான தாதுப்பொருள் வேண்டும். அதில் நல்லதும் உள்ளது. அதற்காக யாரிடமும் சார்ந்து இருக்க வேண்டி இருக்காது. இதை பக்குவமாக, எடுத்து செல்லக்கூடிய அரசியல்வாதிகள் கிடையாது" என பேசியுள்ளார்.