இந்த மாதத்தில் தமிழக பாஜகவில் மிகப்பெரிய மாற்றம் வரும் - அண்ணாமலை பரபர தகவல்!

Tamil nadu BJP K. Annamalai
By Sumathi Jul 24, 2024 03:37 AM GMT
Report

நவம்பர் - டிசம்பர் மாதத்தில் தமிழக பாஜகவில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை 

கன்னியாகுமரி, கீழகருப்புக்கோடு பகுதியை சேர்ந்த வேலாயுதன், தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவாக இருந்தவர். அவர் உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

annamalai

அவரது இல்லத்தில் வேலாயுதன் உருவச்சிலை மற்றும் மணிமண்டப திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்து, அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் சமர்ப்பித்து சாதனை படைத்துள்ளார். முத்ரா வங்கி கடன் 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

தமிழக பாஜக தலைவராகும் வானதி - அண்ணாமலையை திடீரென மாற்றக் காரணம்..?

தமிழக பாஜக தலைவராகும் வானதி - அண்ணாமலையை திடீரென மாற்றக் காரணம்..?

 பாஜகவில் மாற்றம்

14 பெரிய நகரங்களுக்கு இந்த ஸ்பெஷல் பட்ஜெட் கொடுக்கப்பட்டுள்ளது. நகர்புறத்தில் இருக்கக்கூடிய ஏழைகளுக்கு பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது. இது வளர்ச்சிக்கான பட்ஜெட்.

இந்த மாதத்தில் தமிழக பாஜகவில் மிகப்பெரிய மாற்றம் வரும் - அண்ணாமலை பரபர தகவல்! | Annamalai Says Big Change In Tamil Nadu Bjp

தமிழகத்தில் திமுக ஆட்சியில் எத்தனையோ முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 1, மற்றும் 2 தேர்வு வினாத்தாள் லீக் ஆகி உள்ளது. அதற்காக டிஎன் பிஎஸ் சி தேர்வு வேண்டாம் என்று சொல்ல முடியாது. தமிழகத்தில் அரசியல் நேர்மையாக நடக்கவில்லை. தினமும் பெரிய போராட்டம் தான் நடக்கிறது.

நவம்பர் டிசம்பர் மாதத்தில் தமிழக பாஜகவில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.