அமைச்சரவையில் வாய்ப்பில்லை; அந்த பொறுப்பை ஏற்று பணி செய்வேன் - அண்ணாமலை தகவல்
தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
இந்திய பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்றுள்ளார். முன்னதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சரானால், மாநில தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டது.
இதற்கிடையில், டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தேநீர் விருந்தில் தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மட்டும் பங்கேற்றார்.
தலைமையின் முடிவு
அதேபோல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரும் பங்கேற்றனர். இந்நிலையில், டெல்லியில் பேட்டியளித்த அண்ணாமலை, மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.
தமிழ்நாடும் முக்கியம், எல்லாமே முக்கியம். கட்சி தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.