அமைச்சர் செந்தில் பாலாஜி எனக்கு உறவினர்.. IT ரெய்டிற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும் - அண்ணாமலை!
அமைச்சர் செந்தில் பாலாஜி தமக்கு உறவினர் தான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், 5, 8 வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி வழங்கப்படமாட்டாது என்பதற்குத் தமிழக அரசு விரோதத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசைப் பொருத்தவரை கல்வித் தரமாக வழங்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.என்சிஆர்டி, ஏசர் உள்ளிட்ட தரவுகளின்படி இதர தென்மாநிலங்களை விடத் தமிழகம் பின்தங்கியிருக்கிறது.இதில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
கடந்த புதன்கிழமை நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களை வாங்கிக் குவித்ததாகவும், வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாகவும் தகவல் வெளியானது.இதையடுத்து தகவலின் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் 3 நாள்கள் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
செந்தில் பாலாஜி
அதில்,முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டனர். மேலும் செந்தில்குமார் அண்ணாமலைக்கு நெருக்கம் எனக் கூறப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான செந்தில்குமார் தமக்கு உறவினர் தான் என்று தெரிவித்தார்.மேலும் தனது உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதால் அதற்குத் தாம் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று பதில் அளித்தார்.