ஆட்டை பிரியாணி போடப்போறீங்களா..? தயவு செய்து கொடுமைப்படுத்தாதீங்க - அண்ணாமலை

Tamil nadu Coimbatore BJP K. Annamalai
By Karthick Apr 03, 2024 10:06 AM GMT
Report

தன் மீது பயமிருக்கும் காரணத்தால் தான் திமுகவினர் தன்னை ஆடு விமர்சிக்கிறார்கள் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணாமலை பிரச்சாரம்

கோவை தொகுதியில் முகாமிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்து மக்களை சந்தித்து தீவிர பரப்புரையில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

annamalai-responds-to-the-trolls-of-aadu

இதற்கு மத்தியில் கோவை திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டது உடனே, வரும் ஜூன் 4-ஆம் தேதி கோவை மக்களுக்கு மட்டன் பிரியாணி போடப்போகிறோம் என விமர்சித்திருந்தார்.

ஆட்டை கொடுமைப்படுத்தாமல்..

இது தேர்தல் களத்தில் எதிரொலித்து வரும் சூழலில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இதற்கு பதிலளித்துள்ளார்.

நானும் குடிப்பேன் - ஆனா சாராயம் வேண்டாம் - கள்ளு குடிப்போம் - பிரச்சாரத்தில் அண்ணாமலை அதிரடி

நானும் குடிப்பேன் - ஆனா சாராயம் வேண்டாம் - கள்ளு குடிப்போம் - பிரச்சாரத்தில் அண்ணாமலை அதிரடி

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இது குறித்து வினவப்பட்ட போது, திமுகவினருக்கு என் மீது பயம் இருப்பதால் தான் என்மீது ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று கூறி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா போன்றவர்களால் என்னைப் போல வியர்வை சிந்தி உழைக்க முடியுமா? என வினவினார்.

annamalai-responds-to-the-trolls-of-aadu

கோவை அரசியலில் தனிமனித தாக்குதல் அதிகரித்து விட்டதாக விமர்சித்து வரும் தேர்தலில் இவர்களுக்கு கோவை மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் ஆட்டைக் கொடுமைப்படுத்தாமல் பிரியாணி செய்யுங்கள் என கிண்டலாக பதிலளித்தார்.