மோசமானது இன்னும் இருக்கு.? - வந்தது திமுக ஃபைல்ஸ் 3 - அடுத்த ஆடியோ வெளியிட்ட அண்ணாமலை

Andimuthu Raja DMK BJP K. Annamalai
By Karthick Mar 08, 2024 02:01 AM GMT
Report

தொடர்ந்து திமுகவின் பல தலைவர்களை குறித்து வைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பல ஆடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.

DMK files 3

தமிழ்நாட்டின் ஆளும் கட்சி திமுகவிற்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்களை வைத்து கொண்டே உள்ளார். DMK files என்ற தலைப்பில் பல்வேறு சிக்கல்கள் கொண்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றார்.

annamalai-releases-another-audio-in-dmk-files

முதலில், திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு தொடர்புடைய தகவல்களை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, பிடி ஆர் குறித்த சர்ச்சைக்குறிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

annamalai-releases-another-audio-in-dmk-files

அதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் ஆடியோவை வெளியிட்ட அவர் தற்போது அடுத்த ஆடியோவை வெளியிட்டுள்ளார். இதுவும் ஆ.ராசாவின் ஆடியோவே.

DMK files 3- ஆ.ராசாவின் ரகசிய பேச்சு - அண்ணாமலையின் அடுத்த டார்கெட்...!

DMK files 3- ஆ.ராசாவின் ரகசிய பேச்சு - அண்ணாமலையின் அடுத்த டார்கெட்...!

இனிமேல் தான்...

இது குறித்தான அவரது எக்ஸ் தளப்பதிவில், திமுக எம்பியும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராஜா (2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளி) மற்றும் எம்எஸ் ஜாபர் சைட், தமிழக மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் இடையேயான உரையாடல்.

ஒரு கட்டத்தில் நிர்வகிக்கப்படும் சிபிஐ சோதனை, அங்கு மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரெய்டு பற்றிய முன்கூட்டியே தகவல்களைப் பெறுகிறார்கள். மிக மோசமான விஷயம் என்னவென்றால், சிபிஐ அதிகாரிகள் வருவதற்கு முன்பே ஆதாரங்கள் வெளியில் அனுப்பப்பட்டன. இதைவிட மோசமான வீடியோ இனிமேல் தான் வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.