நீதிமன்றமே குறைகூறுகிறது...ரஞ்சனா நாச்சியார் விவகாரம்..! அண்ணாமலையின் கேள்விகள்!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரஞ்சனா நாச்சியார் செய்ததில் தவறில்லை என தெரிவித்துள்ளார்.
ரஞ்சனா நாச்சியார்
பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்களை கண்டித்த ரஞ்சனா நாச்சியாரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அவர் கைதாகி பின் ஜாமீன் பெற்று வெளிவந்தார். அவர் பாஜகவை சேர்ந்தவர். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ரஞ்சனா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர், சட்டத்தை நாம் கையில் எடுக்கக்கூடாது அது தவறாக போயிடும் என கூறி, ஆனால் ஒரு சாமானியனுக்கு வெகுண்டெழுந்து காவல் துறை, போக்குவரத்து துறை போன்றவர்கள் கேள்வியே கேட்காத நிலையில், ஒரு சாமானியன் எவ்வாறு கேள்வி எழுப்பாமல் இருக்க முடியும் என கூறினார்.
இதுவிட என்ன பண்ண முடியும்
அவர் நடந்த கொண்ட முறை குறித்து நாம் விவாதிக்கலாம் ஆனால், அவர் கேள்வி கேட்டதில் தவறில்லை என குறிப்பிட்டு, அவர் செய்த முழுவதையும் நான் பார்க்கவில்லை என கூறி, மாணவர்கள் அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்காக சமூகஅக்கறையுடன் இதனை செய்திருப்பதாக நீதிபதியே கூறியதாக குறிப்பிட்டார்.
திருநெல்வேலி சம்பவம், வேங்கைவயல் விவகாரத்தில் நேரமில்லாத காவல்துறைக்கு இது போன்ற விஷயங்களில் மட்டுமே நேரமிருக்கிறதா என்றும் வினவிய அண்ணாமலை, நீதிமன்றமே காவல்துறை கடமை சரியாக செய்யாமல் நெறிதவறிவிட்டது என்றும் வேறுயாராவது வெட்ட வெளிச்சமாக இது போல படம் பிடித்து காட்டமுடியுமா என்ற அவர் கேள்விகளை எழுப்பினார்.