பட்டியலில் பெயர் இல்லை - அண்ணாமலையின் புகார்!! திமுக சட்டத்துறை செயலாளர் பதில்
நீலகிரி மற்றும் ஈரோடு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் CCTV கேமராக்கள் சில நிமிடங்கள் அணைந்தது தொடர்பாக செய்தி வெளியாகி பெரும் வைரலானது. இது தொடர்பாக இன்று திமுகவின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகில் ட்ரான் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதுமின்றி முழுமையாக இயங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அண்ணாமலை வாக்காளர் பட்டியலில் 1 லட்ச பேரின் பெயர்கள் விடுபட்டு போனதை குறித்து குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சட்டத்தை படித்து
இதற்கு பதிலளித்த அவர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தல் ஆணையம் இந்த பணியை செய்கிறது. அதில் யாராலும் தலையிட முடியாது. ஒவ்வொரு வருடமும் அது சீரமைக்கப்படும். தேர்தல் வருடம் அப்போது குறைந்தபட்சம் 3 முறை இந்த பட்டியல் வெளியிடுவார்கள்.
தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்கு ஸ்பெஷல் கேம்ப் வைக்கும் நிலையில், அப்போதெல்லாம் விட்டு விட்டு, தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா..? என்பதை உறுதிப்படுத்திப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது அவர்களது கடமை.
மக்களுடன் பணியாற்றுபவர்களுக்கு கட்சியினருக்கு இது தெரியும். whatsapp, facebook தளங்களில் செயலாற்றுபவர்களுக்கு இது தெரியாது. இது போன்ற சட்டத்தை அவர்கள் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.