கருணாநிதிக்கு 2G - ஸ்டாலினுக்கு 2000 கோடி போதை கடத்தல் - எத்தனை நாட்களுக்கு.? அண்ணாமலை

M K Stalin Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick Mar 06, 2024 01:58 AM GMT
Report

போதை பொருள் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை அறிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ₹2000 கோடி மதிப்பிலான சூடோஎபெட்ரீன் போதைப்பொருளைக் கடத்திய, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுக நிர்வாகியும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்ற செய்தி கடந்த பிப்ரவரி 24 அன்று வெளியில் தெரிய வந்தது.

annamalai-question-to-mk-stalin-in-drug-case

கடந்த பிப்ரவரி 28 அன்று, தமிழகத்திற்குக் கொண்டு வரவிருந்த சுமார் ₹1200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள், தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தால், நடுக்கடலில் கைப்பற்றப்பட்டன.கடந்த மார்ச் 1 அன்று, மதுரையில் சுமார் ₹180 கோடி மதிப்பிலான மெத்தாபெட்டமைன் போதைப் பொருள்கள், வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.

எத்தனை நாட்களுக்கு.?

மார்ச் 5, இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் சுமார் ₹108 கோடி மதிப்புள்ள ஹசிஷ் போதைப் பொருள், வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள்,

வெட்கித் தலைகுனிய வேண்டியது முதல்வர் - எதனை சுட்டிக்காட்டுகிறார் அண்ணாமலை..?

வெட்கித் தலைகுனிய வேண்டியது முதல்வர் - எதனை சுட்டிக்காட்டுகிறார் அண்ணாமலை..?


சென்னையில் நேற்று பேசும்போது, போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகியின் தொடர்பைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும், போதைப்பொருளுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என்று தமிழக மக்களுக்கு உறுதியளித்திருத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

annamalai-question-to-mk-stalin-in-drug-case

சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தலில், திமுக நிர்வாகி ஒருவரின் தொடர்பு வெளிப்பட்டு 10 நாட்களாகிறது. ஆனால், முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், 2G விசாரணையின் போது, தனது தந்தை மற்றும் முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி செய்ததைப் போல, பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் எத்தனை காலம்தான் கேள்விகளைத் தவிர்த்து அமைதியாக இருப்பீர்கள்? என குறிப்பிட்டுள்ளார்.