ஜூன் 4 -ஆம் தேதி தெரியும்..? கோபாலபுர ஊழல் குடும்பத்தினர் சிறையில் இருப்பார்கள் - அண்ணாமலை சவால்
ஜூன் 4-ஆம் தேதி கொங்கு மண்டலம் யார் என்று பார்த்து விடலாம்..? என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்
அண்ணாமலை பேட்டி
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக மக்களவை வேட்பாளரான அண்ணாமலை பேசியது வருமாறு,
பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருப்பவர் அண்ணாமலை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதற்கு பதிலளித்த அண்ணாமலை, நான் பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டியளிப்பதில்லை. இபிஎஸ் பேசியிருப்பது "நரி அந்த திராட்சை பழம் புளிக்கிறது" என்பதைப் போல் உள்ளது. போட்டி என்பது திமுக - பாஜகவிற்கு இடையே தான்.
தமிழ்நாட்டில் எவ்வளவோ கட்சிகள் உள்ளது. மோடியை பொறுத்தாமட்டில் போட்டியில் யார் இருக்கிறாரோ அவர்களிடம் இருக்கும் குறையை தான் மோடி கூறுவார். இபிஎஸ்'ஸை ரோடு ஷோ போக சொல்லுங்கள் பார்ப்போம், அதில் எத்தனை பேர் வருவார்கள். அவர்கள் வீதியில் வந்தால் மக்கள் யாரும் வரமாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.
ஜூன் 4-ஆம் தேதி
அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தந்தையே ஒரு சமூக விரோதி. சாராயம் விற்பவர். சமூக விரோதியின் பையனாக இருந்துகொண்டு டிஆர்பி ராஜா இப்படி பேசுவது நகைச்சுவையாக உள்ளது. இவர்களா சமூகவிரோதி குறித்து பேசுவது. வெட்கமாக இல்லையா..? இதெல்லாம் என் கொடுமை..இவுங்க பேசுவாங்க நாம கேட்கணுமா..?
2024 தேர்தலுக்குப் பிறகு கோபாலபுரத்தில் இருக்கும் ஊழல் குடும்பத்தினர் சிறையில் இருப்பார்கள் என்று மோடி கேரண்டி கொடுப்பார். தமிழகத்தின் 8 கோடி மக்களையும் திமுக என்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றுவோம் என மோடி கேரண்டி கொடுப்பார். தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழிப்பேன் என மோடி கேரண்டி கொடுப்பார்.
கடந்த 60 ஆண்டுகளாக ஒரு constructive narrative set செய்துள்ளார்கள். பாஜக மேல்தட்டி மக்கள் கட்சி. பாஜக உள்ளே வந்தால் அனைத்தும் காணாமல் போய்விடும். ஆனால், இதெல்லாம் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடும்.
2024-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி கொங்கு மண்டலம் யார் என்று பார்த்து விடலாம்..? என்றும்