கருணாநிதியின் நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்பேன் - அண்ணாமலை!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கருணாநிதி
சென்னையில் பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிரீன் கலாம் இயக்கத்தின் சார்பாக நடிகர் விவேக்கின் மனைவிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னையில் வரும் 18 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் கருணாநிதியின் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது.
அண்ணாமலை
ஏற்கனவே கருணாநிதியின் நூறு ரூபாய் நாணயம் வெளியிடுவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசி கோரிக்கை வைத்திருந்தது.தற்பொழுது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் அதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ளவுள்ளதாக உள்ளதாக கூறினார்.மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக தன்னை அழைத்ததால் அவரின் அன்பான அழைப்பை ஏற்று தமிழக பாஜக சார்பில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.