கூட்டணிங்கறதுக்காக எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது - அண்னாமலை சாடல்!
கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எல்லாவறையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கூட்டணி
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என பாஜக தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக அறிவித்தார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது அவரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்காமல் தவிர்த்தார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அமித்ஷா வரும்பொழுது எல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
பாஜக வளர்ச்சி
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதலளித்த அண்ணாமலை அது குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை.
தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துள்ளதாகவும் , கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் இருக்கின்றன, இத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்று மாநில தலைவராக தான் சில கருத்துக்களை முன்வைப்பேன். பாஜகவின் வளர்ச்சி என்பது அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.