தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது - அண்ணாமலை
தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை குற்றச்சாட்டு
கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் மற்றும் முக்கிய குற்றவாளியான 24 வயதான முகமது ஷாரிக் ஆகியோர் தீயில் கருகி காயமடைந்தனா். அது குறித்து கர்நாடக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்த வந்த வண்ணம் உள்ள நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில உளவுத்துறை உறக்கநிலையில் உள்ளது. தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது;
மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில், ஷாரிக் போலி அடையாள அட்டைகளை காட்டி கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.’ என தெரிவித்துள்ளார்.
திமுக @arivalayam ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில உளவுத்துறை உறக்கநிலையில் உள்ளது.
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 23, 2022
தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது;
மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில்,
ஷாரிக் போலி அடையாள அட்டைகளை காட்டி கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
- மாநில தலைவர்
திரு. @annamalai_k pic.twitter.com/PfJT9o79Bm