ரூ.4 கோடி..பேசுறதுக்கு ஒன்னும் இல்ல.. நடவடிக்கை எடுக்கணும் - மவுனம் கலைத்த அண்ணாமலை
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வரும் மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக திருநெல்வேலி மக்களவை தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
4 கோடி ரூபாய்
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரகாலமே இருக்கும் நிலையில், அண்மையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் 3 பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இது குறித்து கோவை மக்களவை வேட்பாளரான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நடவடிக்கை வேண்டும்
கோவை சரவணம்பட்டியில் செய்தியர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது வருமாறு, இது சம்மந்தமாக திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரன், ஒரு சதி அவரின் பெயர் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என நயினார் சொன்ன பிறகு இது குறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை. இதில் யாரெல்லாம் சம்மந்தப்பட்டவர்கள்...தேர்தல் அதிகாரிகள் போன்றவர்கள் நடவடிக்கை எடுப்பதில் எந்த வித நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சனை இல்லை.
தனிப்பட்ட முறையில் நயினார் நாகேந்திரன் இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என கூறிய பிறகும் எதிர்க்கட்சிகள் இதனை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதில் என்ன சொல்வது.