தமிழக பாஜக புதிய தலைவர் போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை அறிவிப்பு
புதிய மாநில தலைவருக்கான போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மாநில தலைவர்
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை இல்லை.
என்னை பொறுத்தவரை பாஜக கட்சி நன்றாக இருக்க வேண்டும், நல்லவர்கள் இருக்கக் கூடிய கட்சி, நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி. இந்த கட்சிக்காக ஏராளமானோர் உயிரைக் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள்.
அண்ணாமலை விளக்கம்
அதனால் பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவன் நான். தமிழக பாஜகவில் அனைவரும் சேர்ந்து ஒரு தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வோம். அதனால் போட்டி என்பது இருக்காது.
என்னுடைய பணி தொண்டனாக தொடரும். 2026 சட்டமன்றத் தேர்தல் மக்களுக்கு மிகவும் முக்கியம். தொண்டனாக கட்சியின் பணிகளை செய்வேன். டெல்லிக்கு செல்லப் போவதில்லை. தமிழ்நாட்டில்தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.