அண்ணாமலைதான் வேண்டும்; அதிமுக கூட்டணி வேண்டாம் - போஸ்டரால் பரபரப்பு

Tamil nadu ADMK BJP K. Annamalai
By Sumathi Apr 02, 2025 05:30 PM GMT
Report

அதிமுக கூட்டணி வேண்டாம் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில், திமுக., அதிமுக., தவெக., பாமக., பாஜக., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்கவுள்ளன.

viral poster

இதற்கிடையில் கூட்டணி குறித்த முடிவுகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

40 வருடங்களாக என்ன செஞ்சீங்க? கச்சத்தீவை கையில் எடுக்கும் திமுக - அண்ணாமலை கொதிப்பு

40 வருடங்களாக என்ன செஞ்சீங்க? கச்சத்தீவை கையில் எடுக்கும் திமுக - அண்ணாமலை கொதிப்பு

போஸ்டரால் பரபரப்பு

குறிப்பாக, அடுத்த புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

annamalai

இதனால் தற்போது ராமநாதபுரம் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் மேலக்கோடுமலூர் ஊராட்சி மன்ற தலைவர் செய்யாமங்கலம் கே. சரவணன் பெயரில் பரமகுடியில், போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அதில் வேண்டும்... வேண்டும்... மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும்... வேண்டாம்... வேண்டாம்... அதிமுக கூட்டணி வேண்டாம்... என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.