அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி ...அதிமுக உறுதி

Shri Jagat Prakash Nadda Tamil nadu BJP K. Annamalai Edappadi K. Palaniswami
By Karthick Sep 24, 2023 04:59 AM GMT
Report

டெல்லியில் பாஜகவின் தேசிய தலைமையிடம் பேசிய அதிமுகவின் மூத்த தலைவர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி என உறுதிபட தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

முறிந்ததா கூட்டணி 

திராவிட கட்சிகளின் தலைவரான பேரறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்ததை தொடர்ந்து அதிமுக கடுமையான பதிலடிகளை கொடுத்து வருகின்றது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முக்கிய தலைவர் ஜெயக்குமார், அதிமுக பாஜவுடனான கூட்டணியில் இல்லை என அதிரடியாக அறிவித்தார்.

annamalai-need-to-be-changed-admk-pressures-bjp

இது தொடர்பாக இக்கட்சி தலைவர்களும் மாறிமாறி கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அண்ணாமலை செய்தியாளர்களின் சந்திப்பின் போது, அதிமுகவிற்கும் பாஜகவிற்கு எந்த பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை என கூறி, ஆனால் அண்ணாமலைக்கும் அதிமுகவின் தலைவர்களுக்கும் பிரச்சனை இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

அதிமுக பாஜக கட்சிகளுக்கிடையே பிரச்சனை இல்லை - அண்ணாமலை விளக்கம்!!

அதிமுக பாஜக கட்சிகளுக்கிடையே பிரச்சனை இல்லை - அண்ணாமலை விளக்கம்!!

அண்ணாமலை மாற்றப்பட வேண்டும்..?

இந்த சூழலில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் டெல்லி சென்று பாஜகவின் தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டணி குறித்து இதில் வலுவான நிபந்தனைகளை அதிமுக வைத்ததாக கூறப்படும் நிலையில், தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

annamalai-need-to-be-changed-admk-pressures-bjp

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே தமிழகத்தில் கூட்டணி வைக்கமுடியும் என பாஜக தேசிய தலைவர்களிடம் அதிமுகவின் மூத்த தலைவர்கள் உறுதிப்பட கூறியதாக தகவல்கள் வந்துள்ளது. இதில் பாஜக தலைமை என்ன முடிவெடுக்கும் என்பது சிறுது காலங்களில் தெரிந்து விடும்.