புது கட்சியோடு விஜய்யுடன் இணையும் அண்ணாமலை? பகீர் கிளப்பும் பிரபலம்
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி
மூத்த அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் இதுகுறித்து கூறுகையில், ‘‘அண்ணாமலை தனி கட்சி தொடங்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒருங்கிணைப்பாளராக ஒரு நபரை போட்டிருக்கிறார்.

அவர் தூத்துக்குடி மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த செல்வம். டிசம்பரில் அண்ணாமலை கட்சி தொடங்கப் போவதாக சொல்கிறார்கள். ஒரு அரசியல் போட்டியளராக மாறுவார் அண்ணாமலை. அவர் விஜயுடன் சேர்ந்தால் விஜய்க்கு பலம் கூடத்தான் செய்யும்.
அவர் பாஜகவில் இருப்பவர். ஐபிஎஸ் படித்தவர். ஆற்றலாளர். பாஜகவில் அண்ணாமலையை என்ன செய்தார்கள் என தெரியவில்லை. அது இரும்பு திரையில் உள்ள கட்சி. நயினார் நாகேந்திரனை பதவியில் அமர்த்தி விட்டு இவரை தூக்கி எறிந்து விட்டார்கள்.
விஜய்யுடன் அண்ணாமலை?
ஆகையால் இவர் மனம் உடைந்து விட்டார். ஒரு முடிவெடுத்து விடலாமே, ஐபிஎஸ் படித்து நாம் ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்கக் கூடாது? என நினைக்கிறார். அண்ணாமலை விஜயுடன் இருந்தால் மக்கள் மனதில் ஒரு பெரிய மாற்றம் நிகழும்.

இவர்கள் இருவரும் சேர்ந்தால் மேற்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை வீழ்த்த முடியும். செங்கோட்டையனும், அண்ணாமலையும் தொண்டர்களிடம் செல்பவர்கள். செந்தில் பாலாஜியின் அரசியல் கரன்சி அரசியல். அதிமுகவில் இருக்கும் போதும், திமுகவில் இருக்கும் போதும் கரன்சி அரசியல்தான் செய்தார்.
உள்ளாட்சி மன்ற தேர்தலில் எல்லோருக்கும் கரன்சி கொடுத்தார். இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் அவர் பரிசு அரசியல் செய்தார். ஆகையால், அண்ணாமலை, செங்கோட்டையன் இணைந்து கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் அரசியலை சரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil