செங்கோட்டையன் செஞ்சது தப்பு; திமுக முடிவுதான் இது - நயினார் ஆவேசம்
செங்கோட்டையன் எடுத்த முடிவு தவறானது என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
தவறான முடிவு
புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதலமைச்சர் உத்தரவுப்படி அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு தான் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

எனவே முதலமைச்சர், திமுக அறிவுரைப்படி செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். பாஜக மேலிடம் தன்னை அழைத்தது அதன் பெயரில் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்ததாக செங்கோட்டையன் முதலில் கூறினார்.
நயினார் ஆவேசம்
அதன் பின்னர் அவரே அதை மறுத்தார். அதிமுக எல்லா காலகட்டத்திலேயும் ஒரு சில நேரங்களில் இடர்பாடுகள் ஏற்படும், அந்த இடர்பாடுகளை தாண்டி தான் மீண்டு அதிமுக வளர்ந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு என்ன செய்துள்ளார்.

கஞ்சா புழக்கம், போதை பொருள் அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து குற்ற செயலுக்கும் போதை தான் காரணமாக இருந்து வருகிறது. மேலும் கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் வேறு குற்றவாளிகள் சுட்டு பிடித்துள்ளனர்.
பாஜகவை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பாஜக வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிமுகவிலிருந்து ஒவ்வொரு தலைவர்கள் பிரிந்து சென்றுள்ளனர். அதிமுகவில் இருந்து விலகிய பாதி பேர் திமுகவில் சேர்ந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
யாழ்.நகரில் தலைவிரித்து ஆடும் மீட்டர் வட்டிக் கொடுமை..! அதிரடியாக கைது செய்யப்பட்ட கும்பல் IBC Tamil
மரியாதையுடன் பேசுங்கள்: சபையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் - அர்ச்சுனாவுக்கு கடும் எச்சரிக்கை IBC Tamil
15 சிறுவர்களின் உயிரைக் காக்க இலவச இதய சத்திரசிகிச்சைகள்: கராப்பிட்டியவில் களமிறங்கிய வெளிநாட்டு மருத்துவக் குழு IBC Tamil
தனிநாடு - கூட்டாட்சிக் கோரிக்கை பயங்கரவாதமல்ல என்கிறார் அமைச்சர் ஹர்ஷன நானயக்கார - ஈழத்தமிழ் மீது விரிக்கப்படும் வலையா... IBC Tamil