பாத்ரூம் போகும்போது வரும்போதுலாம் இல்ல...என் லைப்ல இனி அது நடக்காது - அண்ணாமலை!
விமான நிலையத்தில் பிரஸ் மீட் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதன் முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக மொத்தமாக 40 தொகுதிகளிலும் வென்றது. இது பாஜகவுக்கு சற்று ஏமாற்றத்தை தந்தது.
கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார்.வாக்கு எண்ணிக்கை முடிவில் அண்ணாமலை தோல்வியை தழுவினார். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அதிரடியாக பேட்டி கொடுப்பது வழக்கம்.
அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு காரசாரமாக பதிலளிப்பதோடு, எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கும் சுடச்சுட பேட்டி கொடுப்பார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி,"பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப் பார்க்கிறார் அவர்.
விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுக்கிறார். பேட்டி கொடுப்பது மட்டும் தான் அவர் வேலை. பேட்டி கொடுத்தே மக்களை இழுக்கப் பார்க்கிறார். தலைவர்கள் பல வழிகளில் மக்களைச் சந்திப்பார்கள்.ஆனால் இந்த தலைவர் டெக்னிக்காக அடிக்கடி பேட்டி கொடுத்து கொடுத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற முயற்சித்து வருகிறார்.
என் லைப்ல..
அது ஒன்றும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் எடுபடாது. ஏன் எங்களுக்கு எல்லாம் பேட்டி கொடுக்கத் தெரியாதா? தினந்தோறும் பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கலாம்? ஆனால், அதனால் நாட்டு மக்களுக்கு என்ன பயன்?" என்று அண்ணாமலையை நேரடியாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை,
லைப்ல இனி ஏர்போர்ட்டில் பிரஸ் மீட் வைக்க மாட்டேன். எல்லாமே முறைப்படுத்த போகிறோம். பாத்ரூம் போகும்போது, வரும்போதெல்லாம் இனி யாரும் பேசமாட்டார்கள். கோவையில் நான் செய்தியாளர்களை சந்திப்பது என்றால் கட்சி அலுவலகத்தில் மட்டுமே சந்திப்பேன்.
24 மணி நேரத்திற்கு முன்பே முறையாக ஷெட்யூல் போட்டு கொடுத்து விடுவோம். ஏனெனில், விமானத்தில் இருந்து இறங்குகிறோம். ஏதோ இரண்டு விஷயம் நடந்து இருக்கும். வரும் போது தெரிவது இல்லை. எனவே முறைப்படி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறேன். இனி நாளைக்கு பிரஸ் மீட் வைக்கப்படும். தினமும் முறைப்படி நோட் அனுப்பி விடுவோம்" என்று கூறினார்.