தமிழ்தாய் வாழ்த்து இழிவுப்படுத்தப்பட்ட விவகாரம் - கனிமொழியின் கேள்விக்கு அண்ணாமலை பதிலடி

Smt M. K. Kanimozhi DMK BJP K. Annamalai Karnataka
By Thahir Apr 28, 2023 07:38 AM GMT
Report

கர்நாடகா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்தாய் வாழ்த்து இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டிய நிலையில் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக சட்ட சபை தேர்தல் 

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்தது.

24-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனிமொழி கேள்வி 

இந்த நிலையில் எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார் என்று பதிவிட்டிருந்தார்.

Annamalai is a response to Kanimozhi

இதெல்லாம் உங்களுக்கு தேவையா? 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனிமொழி அவர்களே.

Annamalai is a response to Kanimozhi

ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி.

அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?

"கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்" என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது.

தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்