அமைச்சராகும் அண்ணாமலை? மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

BJP Narendra Modi K. Annamalai
By Sumathi Jul 03, 2025 01:30 PM GMT
Report

அமைச்சரவையில் மாற்றம் செய்ய பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை மாற்றம்

பாஜக தேசிய தலைவர்களை கட்சி தலைமை மாற்றம் செய்து வரும் நிலையில், அமைச்சரவையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

annamalai - modi

தொடர்ந்து பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்து, சில அமைச்சர்களுக்கு தேர்தல் ரீதியான பொறுப்பு வழங்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின்

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின்

அண்ணாமலைக்கு பதவி?

அந்த வகையில் மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, கிஷன் ரெட்டி ஆகியோர் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

அமைச்சராகும் அண்ணாமலை? மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்! | Annamalai In Central Cabinet Bjp Plan

மேலும், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹரியானாவைச் சேர்ந்த டாக்டர் சுதா யாதவ் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.