அண்ணாமலை இடியட் கேட்டதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - டி.ஆர்.பாலு கொதிப்பு!
அண்ணாமலை இடியட் கேட்டதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை இடியட்
முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, டி.ஆர்.பாலு 21 நிறுவனங்கள் இருப்பதாகவும்,அதன் மூலம் 10,800 கோடி வருமானம் வந்ததாகவும்,ஊழல் செய்திருந்தார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் டி ஆர் பாலு பேசுகையில், திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியிட்டார்.
அந்த சொத்து பட்டியலில், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர். இதனை தொடர்ந்து திமுகவில் இருந்து டி.ஆர்.பாலு, கனிமொழி என தனித்தனியாக விளக்கம் கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
டி.ஆர்.பாலு ஆவேசம்
ஆனால் அண்ணாமலை அதற்கு பதில் அளிக்கவில்லை. இதனால் நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என அண்ணாமலை சொல்லியிருந்தார், அதில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தேன்.
ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி அத்தனை விளக்கமும் அளித்தேன், வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், அந்த இடியட் கேட்டதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என பதிலளித்தார்.