பொங்கல் விழா - கூட்டணி பேச்சுவார்த்தை!! டெல்லி விரையும் அண்ணாமலை

Amit Shah Narendra Modi K. Annamalai
By Karthick Jan 13, 2024 08:30 AM GMT
Report

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்லவுள்ளார்.

பொங்கல் விழா

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்ல பொங்கல் விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

annamalai-going-to-delli-to-meet-modi-amit-shah

எல்.முருகனின் டெல்லி இல்லத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கவுள்ளார். அதற்காக அவர் இன்று மாலை டெல்லி பயணிக்கிறார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம்..! 11 நாட்கள் சிறப்பு பூஜை..! தயாராகும் பிரதமர் மோடி..!

ராமர் கோவில் கும்பாபிஷேகம்..! 11 நாட்கள் சிறப்பு பூஜை..! தயாராகும் பிரதமர் மோடி..!

கூட்டணி பேச்சு...

நாளை பொங்கல் விழாவில் பங்கேற்கும் அண்ணாமலை, அதனை தொடர்ந்து கட்சியின் தேசிய தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

annamalai-going-to-delli-to-meet-modi-amit-shah

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழகத்திலும் பாஜக வாக்குகளை அறுவடை செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சந்திப்பின் போது கூட்டணி விவகாரம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.