அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை - ஷாக்கில் திணறும் பாஜக!
தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் அண்ணாமலை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு ரசிகர் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
"தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை" " மக்கள் தலைவர்" என்பது உள்ளிட்ட வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ரசிகர் மன்றத்தில் இணைய செல்போன் எண் கொடுத்து மன்றத்தில் சேருவதற்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
போஸ்டர் வைரல்
மேலும் அந்த போஸ்டரில் "தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார்" "மக்கள் தலைவர் "அண்ணாமலை தலைமை ரசிகர் சமூக சேவை நற்பணி மன்றம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பாஜக கட்சியினரிடம் கேட்ட போது அண்ணாமலை மீதுள்ள தனிப்பட்ட விருப்பத்தால் இந்த மன்றத்தை தொடங்கி உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கிடையில், அரசியல் நிகழ்வுகளில் பெரிய அளவில் பங்கேற்காமல் அண்ணாமலை ஒதுங்கியுள்ளார். ஒரு சில கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss 9: நீங்க சொல்ற படியெல்லாம் பண்ண முடியாது! எகிறிய பார்வதி... கொந்தளித்த சக போட்டியாளர்கள் Manithan

சிறிலங்கா அரசின் மற்றுமொரு கொடூர பக்கம்: சர்வதேசத்திற்கு விற்கப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்கள் IBC Tamil
