என் அம்மாவை பார்த்து 2 மாசம் ஆகுது; தெளிவாக இருக்கிறேன் - அண்ணாமலை
அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அதனை முன்னிட்டு பல்லடத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அமர்வார் என தெரிந்து நடக்கும் தேர்தல் இந்த தேர்தல். கெட்டவர்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்றால் நல்லவர்கள் பேச துவங்க வேண்டும்.
கரூர்-கோவை 6 வழிச்சாலை
உங்களுக்கும் அரசிற்கும் பாலமாய் இருப்பேன். தொகுதிக்கு தேவையானதை டெல்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கரூர்-கோவை இடையே ஆறு வழிச்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
சமையல் எரிவாயு பைப் மூலம் வீட்டிற்கு கொண்டு வரப்படும். மக்களுக்காக கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கேள்வியே கேட்பதில்லை. தற்போதுள்ள கோவை எம்பியை யாரும் பார்த்ததே இல்லை. ஆனால் அண்ணாமலை மாநில தலைவராக எத்தனை பேர் பார்த்து உள்ளீர்கள்.
அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை. என் அம்மாவை பார்த்து இரண்டு மாதம் ஆகிவிட்டது. நான் தெளிவாக உள்ளேன். இப்போது மாற்றமில்லை என்றால் எப்போதும் இல்லை என்பதற்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.