கோவை பரப்புரையில் குதூகலம்...வள்ளி கும்மி ஆடி சிலிர்க்கவைத்த அண்ணாமலை
கோவை மக்களவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தலைமைக்கு இணங்க தேர்தலில் களமிறங்கியுள்ள அண்ணாமலை, கோவை பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கோவையில் பாஜகவிற்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. அதன் காரணமாகவே அவர், கோவை தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். எதிர் வேட்பாளர்களாக அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன், திமுக சார்பில் கணபதி பி.ராஜ்குமார் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
வள்ளி கும்மி
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை, கோவை பகுதியில் பல விதமான பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அவர் வெள்ளக்கிணறு பகுதியில் நேற்று வள்ளி கும்மி நடன குழுவினருடன் உச்சமாக வள்ளி கும்மி நடனம் ஆடி வாக்குசேகரித்தார்.
திடீரென அண்ணாமலை நடனமாடியதால், தொண்டர்கள் உற்சாகத்தில் குதூகலித்துள்ளனர். annamlaaஇந்த வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.