சனாதனத்தை வெச்சி தேர்தலை சந்திக்கலாமா? தைரியமில்லனா ஓடிரு.. உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை!

Udhayanidhi Stalin K. Annamalai
By Sumathi Sep 07, 2023 03:13 AM GMT
Report

சனாதனத்தை வெச்சி தேர்தலை சந்திக்கலாமா அண்ணாமலை உதயநிதிக்கு சவால் விடுத்துள்ளார்.

சனாதனம் 

சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் என்று உதயநிதி பேசியது பெரும் சர்சையாக வெடித்துள்ளது.

சனாதனத்தை வெச்சி தேர்தலை சந்திக்கலாமா? தைரியமில்லனா ஓடிரு.. உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை! | Annamalai Condemns Udhayanidhi About Sanathanam

தமிழக அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டுவருவோருக்கு ரூ.10 கோடி சன்மானம் என அயோத்தியை சேர்ந்த சந்நியாசியான பரம ஹன்ஸ் ஆச்சாரியா அறிவித்திருந்தார்.

அண்ணாமலை சவால்

இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறுவதாக பாஜகவினர் புகார் கூறி வருகின்றனர். மேலும் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது.

சனாதனத்தை வெச்சி தேர்தலை சந்திக்கலாமா? தைரியமில்லனா ஓடிரு.. உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை! | Annamalai Condemns Udhayanidhi About Sanathanam

இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, சனாதனத்தை" வெச்சி 2024, 2026 தேர்தலை சந்திக்கலாமா?

நீங்கள் சனாதனத்தை ஒழிப்போம் என பரப்புரை செய்யுங்கள், நாங்கள் சனாதனத்தை காப்போம் என பரப்புரை செய்கிறோம். மக்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்று பார்ப்போம். அதற்கு தைரியமில்லை ஓடிரு என உதயநிதிக்கு சவால் விடுத்துள்ளார்.