வெளியான மாணவியின் விவரம்; ஸ்டாலின் இதுக்கு வெட்கப்படணும்.. அண்ணமலை சாடல்!

Tamil nadu Sexual harassment Anna University
By Swetha Dec 26, 2024 09:30 AM GMT
Report

மாணவியின் விவரங்களை வெளியிட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணமலை 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் எஃப்ஐஆர் காப்பி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் மாணவியின் முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளது.

வெளியான மாணவியின் விவரம்; ஸ்டாலின் இதுக்கு வெட்கப்படணும்.. அண்ணமலை சாடல்! | Annamalai Condemns Stalin Releasing Student Detail

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற,

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருநாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கு; முதலமைச்சரே முழு பொறுப்பு - அண்ணாமலை ஆவேசம்

அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கு; முதலமைச்சரே முழு பொறுப்பு - அண்ணாமலை ஆவேசம்

மாணவி விவரம்

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக.

வெளியான மாணவியின் விவரம்; ஸ்டாலின் இதுக்கு வெட்கப்படணும்.. அண்ணமலை சாடல்! | Annamalai Condemns Stalin Releasing Student Detail

இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் முழு பொறுப்பு. திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும்,

காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.