காரை நிறுத்தி டீ குடிச்சது தப்பா? ஆத்திரத்தில் சாலை மறியலில் அண்ணாமலை - வழக்குப்பதிவு!
திடீர் சாலை மறியல் ஈடுப்பட்ட அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பல இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். பின் காரில் அண்ணாமலை சூலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று அங்கு சென்ற போலீசார் அண்ணாமலையின் காரை தடுத்து நிறுத்தி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது, அதனாலேயே காரை தடுத்து நிறுத்துவதாக கூறினர். இதனால் கொந்தளித்த அண்ணாமலை, நான் 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யலையே..
வழக்குப்பதிவு
பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் வீட்டுக்குதானே போகிறேன்? எங்க மைக் இருக்கு? நாங்கள் மைக்கை ஆஃப் செய்து வைத்திருக்கிறோம்.. மைக்கில் பேசுகிறோமோ? பிரச்சாரம் செய்கிறோமோ? தாமரை என்ற வார்த்தையையாவது சொன்னேனா ஒரு வேட்பாளர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்கிறார்.
இரவு 10.30 மணிக்கு ஒரு இடத்தில் காரை நிறுத்தி டீ குடிக்கக்கூடாதா? இது எப்படி விதிமீறலாகும்? நீங்கள் என்னிடம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறீர்கள்'' என்றார். அதனையடுத்து, தன்னுடைய ஆதரவாளர்களுடன் இணைந்து, சூலூரில் சாலைமறியலில் ஈடுபட்டார்.
உடனே அதிகாரிகள் விரைந்து அண்ணாமலையுடன் சமாதானம் பேசியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் 2 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.