நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா..? நாசுக்காக சொன்ன அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி குறித்தான தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
பாஜக - அதிமுக
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினாலும், மீண்டும் மீண்டும் தமிழ்நாடு அரசியலில் இந்த கூட்டணி முடிவடையவில்லை என்ற கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
ஆனால், இக்கட்சி நிர்வாகிகளுக்கிடமும் தொடர்ந்து வார்த்தை மோதல்கள் வெளிப்பட்டு வரும் நிலையில், கூட்டணிக்கான இடமே என்றும் கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இது குறித்து இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக கூட்டணி குறித்து பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரிடம் பேசிய அவர், கடந்த ஒரு மாத காலமாகவே தானும், அதிமுகவின் தலைவர்கள் பேசுவதையும் வைத்தே கூட்டணி பற்றி தெரிந்திருக்க வேண்டும் என நாசுக்காக பதிலளித்தார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருகை அவரின் பணி காரணமாக தள்ளிப்போனதாக குறிப்பிட்டு, ஆனால் இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூரவ தகவல் வெளிவரும் என்றும் கூறி சென்றார்.