மீண்டும் பாஜகவில் தமிழிசை; ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் - அண்ணாமலை பதில்!

Smt Tamilisai Soundararajan Tamil nadu BJP K. Annamalai
By Sumathi Mar 20, 2024 07:44 AM GMT
Report

தமிழிசை செளந்தரராஜன் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநர் பதவி மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். அதன்பின், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

tamilisai with annamalai

சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார். தொடர்ந்து, அவருக்கு அண்ணாமலை உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

உயிரை காப்பாற்றியதே தமிழிசை தான்; எடுத்த அந்த ரிஸ்க் - கோபிநாத் உருக்கம்!

உயிரை காப்பாற்றியதே தமிழிசை தான்; எடுத்த அந்த ரிஸ்க் - கோபிநாத் உருக்கம்!


அண்ணாமலை விளக்கம்

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தமிழிசை சௌந்தரராஜன் 25 ஆண்டுகளாக பாஜகவில் உறுப்பினராக இருந்துள்ளார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதென்பது எளிமையான முடிவு இல்லை. தமிழிசை சௌந்தரராஜன் கடினமான முடிவை எடுத்துள்ளார்.

மீண்டும் பாஜகவில் தமிழிசை; ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் - அண்ணாமலை பதில்! | Annamalai About Tamilisai Resign As Governor

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் ஆளுநராக பணியாற்றி நல்ல பெயரை பெற்றுள்ளார். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.