சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை நீரையும் மலத்தையும் வீசிய நபர்கள்; யாருடைய தூண்டுதல்? கொதித்த அண்ணாமலை
சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் விவகாரம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு உள்ளது. இங்கு வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்மநபர்கள் சிலர், தூய்மை பணியாளரை
சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக கண்டனம் தெரிவித்து கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டையும் சூறையாடியுள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாரகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது,
அண்ணாமலை கண்டனம்
குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு. திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, திரு சவுக்கு சங்கர் அவர்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு.
— K.Annamalai (@annamalai_k) March 24, 2025
திமுக அரசு ஊழல்… https://t.co/9jlkWhGsQi
ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது.
ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.