பிரியாவின் பெயரில் மாபெரும் கால்பந்து போட்டி - அண்ணாமலை

BJP Chennai K. Annamalai Death
By Sumathi Nov 18, 2022 02:32 AM GMT
Report

பிரியாவின் பெயரில் பாஜக சார்பில் மாபெரும் கால்பந்து போட்டி நடத்தவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரியா உயிரிழப்பு

சென்னை, மாணவி பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சென்றார். அங்கு மாணவி பிரியாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிரியாவின் பெயரில் மாபெரும் கால்பந்து போட்டி - அண்ணாமலை | Annamalai About Football Player Priya Death

அதன்பின் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாமலை

அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியாவின் பெற்றோர்களை சந்தித்து பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டோம். சகோதரி பிரியாவின் நினைவு என்றென்றும் நம்முடன் இருக்கவும் தமிழக கால்பந்து வீரர்களை ஊக்குவிக்கவும், கால்பந்து வீரர் ராமன் விஜயனுடன் இணைந்து பாஜக மாபெரும் கால்பந்து போட்டியை நடத்தவிருக்கிறது.

மேலும், சகோதரி பிரியா பெயரில் சிறந்த கால்பந்து வீராங்கனைகளை உருவாக்க ஒரு திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 10 கால்பந்து வீராங்கனைகளின் அனைத்து பயிற்சி செலவையும் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஏற்கும் சொந்த தொகுதியில்

இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் போதாது. இரண்டு கோடி ரூபாய் நிவாரணமாக சகோதரி பிரியா குடும்பத்திற்கு திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.