பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? அண்ணாமலை சொன்னதை பாருங்க

Coimbatore BJP K. Annamalai
By Sumathi Dec 25, 2025 04:35 PM GMT
Report

பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த தகவலை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எத்தனை தொகுதிகள்

கேவையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய அளவில் அதிக விபத்து ஏற்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம்.

பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? அண்ணாமலை சொன்னதை பாருங்க | Annamalai About Bjp Seats In Tamilnadu

தமிழகத்தில் அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பில் உள்ளதா? விபத்துகளை தடுக்க அரசு பேருந்துகளின் தர சான்றுகளை கொடுக்க வேண்டும். இந்துக்கள் பண்டிகைகளில் பங்கேற்காமல் முஸ்லீம், கிறிஸ்தவ பண்டிகைகளில் மட்டும் பங்கேற்று தமிழகத்தில் மத அரசியல் செய்வது திமுக தான்.

அண்ணாமலை தகவல்

தமிழ்நாடு Election ரொம்ப தூரத்துல இருக்கு. தோற்கப் போகிறவர்களுக்கு பயம் வரும். NDA கூட்டணி வலிமையாக தேர்தல் களத்திற்கு வந்து, வெற்றி பெறுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஓபிஎஸ்-க்கு பச்சை கொடி காட்டிய விஜய் - செங்கோட்டையன் தகவல்

ஓபிஎஸ்-க்கு பச்சை கொடி காட்டிய விஜய் - செங்கோட்டையன் தகவல்

திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு. தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் திமுக உள்ளது.

இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் முதல்வர் மத அரசியல் செய்கிறார். பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை சொல்லும் இடத்தில் நான் இல்லை” என தெரிவித்துள்ளார்.