ஓபிஎஸ்-க்கு பச்சை கொடி காட்டிய விஜய் - செங்கோட்டையன் தகவல்
அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் வருவார்கள் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
முக்கிய புள்ளிகள்
கோபிசெட்டிபாளையம் கரட்டூர் தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன், வேலு நாச்சியார் நினைவு தினத்தை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

தொடர்ந்து, அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமையில் 50 பேர் தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ஓபிஎஸ் தமிழக வெற்றி கழகத்தில் வருவது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல வேண்டும் என கருத்து பரிமாறப்பட்டிருக்கிறது.
செங்கோட்டையன் தகவல்
இதனால் ஓபிஎஸ் தான் முடிவுகளை மேற்கொள்வார். கூட்டணி குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை ஏற்று பணி செய்ய இருக்கிறோம். ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு கேள்விகளை விஜய் கேட்டார்.
அதற்கு தெளிவாக பதில்கள் தரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு இயக்கத்தைச் சார்ந்தவர் ஒவ்வொருவரோடு நட்பின் அடிப்படையில் கலந்து பேசுவது வழக்கம். ஆனால் தேர்தல் கூட்டணி என்பது எதிர்காலத்தில் யாரெல்லாம் வருகிறார்கள் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் வருவார்கள் மிக விரைவில் வந்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார்.