தேர்தல் விதிமீறல்;அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு!

BJP K. Annamalai trichy Lok Sabha Election 2024
By Swetha Mar 31, 2024 07:48 AM GMT
Report

திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 700 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் விதிமீறல்

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசியல் காட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு மிக குறைந்த நாள்களே எஞ்சியுள்ளதால் முக்கிய கட்சி தலைவர்கள் தங்களது சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் விதிமீறல்;அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு! | Annamalai 700 Booked For Violating Election Rules

கொளுத்தும் வெயிலிலும் நேரம், காலம் பார்க்காமல் தங்கள் கட்சி, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டுக்குள் சிஏஏ சட்டத்தை விடமாட்டோம் என்று கூற ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது - அண்ணாமலை!

தமிழ்நாட்டுக்குள் சிஏஏ சட்டத்தை விடமாட்டோம் என்று கூற ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது - அண்ணாமலை!

வழக்குப்பதிவு

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தென்னூரில் பரப்புரையாற்றினார்.

தேர்தல் விதிமீறல்;அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு! | Annamalai 700 Booked For Violating Election Rules

அப்போது இரவு 10 மணியை கடந்தும் அண்ணாமலை, அமமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், அண்ணாமலை, பாஜக நிர்வாகிகள் ராஜசேகரன், காளீஸ்வரன், அமமுக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.