நிலவில் சர்வதேச விண்வெளி மையம்? மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்ட அப்டேட்!

C.N Annadurai Anbil Mahesh Poyyamozhi ISRO
By Vidhya Senthil Jul 28, 2024 04:45 AM GMT
Report

நிலவிலேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாக தெரிவித்தார் .

 இஸ்ரோ

கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் .

நிலவில் சர்வதேச விண்வெளி மையம்? மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்ட அப்டேட்! | Annadurai Information On The Moon

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,'' இந்த பள்ளியில் தான் பள்ளிப்படிப்பை படித்தாக தெரிவித்தார்.மேலும் இந்தியாவில் மட்டும் 3 லட்சம் தானியங்கி வங்கிகள் உள்ளது.

இந்த செயற்கைக்கோள்கள் எல்லாம் திரும்பத்திரும்ப செய்யும் போது ஆராய்ச்சி மனப்பான்மையில் இருப்பவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. இதனால் அந்த பணியை தனியாருக்கு கொடுக்க முயற்சிக்கிறார்கள்.இதில் ஒருபக்கம் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்று தெரிவித்தார்.

வெடித்து சிதறிய செயற்கைகோள் - சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு?

வெடித்து சிதறிய செயற்கைகோள் - சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு?

சர்வதேச விண்வெளி மையம்

தொடர்ந்து பேசிய அவர் நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம். நிலவில் மெதுவாக துருவ பகுதியில் இறங்கமுடியும் என சொல்லிவிட்டோம். தற்போது உலக நாடுகள் எல்லாம் நிலவில் சிறு குடியிருப்புகளை உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறோம் .

நிலவில் சர்வதேச விண்வெளி மையம்? மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்ட அப்டேட்! | Annadurai Information On The Moon

இதனையடுத்து நிலவிலேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாக தெரிவித்தார் . இவரது பேச்சை பள்ளி மாணவர்கள் ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் கேட்டு மகிழ்ந்தனர்.